Home
You Are Here: Home » News » கோவில்பட்டியில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை

கோவில்பட்டியில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை

கோவில்பட்டியில் நேற்று சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக மரங்கள் வேரோடு சாயந்தன. மேலும் மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த சில தினங்களாக கத்திரி வெயில் வாட்டி வந்த நிலையில்‌, நேற்று மாலை திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இந்த திடீர் சூறாவளி காற்றில் சாலையோரத்தில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில்‌, கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இருந்த பழமையான வாகை மரம் ஒன்று அருகில் இருந்த உயர் அழுத்த மின் மாற்றி மீது விழுந்ததில் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அங்கு விரைந்த மின் வாரிய ஊழியர்கள்‌, மின் மாற்றியை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்‌. மேலும் நகராட்சி ஊழியர்களும் சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த திடீர் மழையால் அந்த பகுதியில் சுமார் 4 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top