Home
You Are Here: Home » News » Tamil Nadu » Krishnagiri » வீட்டில் புகுந்த கொடிய விஷம் கொண்ட பாம்பு மீட்பு

வீட்டில் புகுந்த கொடிய விஷம் கொண்ட பாம்பு மீட்பு

கிருஷ்ணகிரி அருகே ஆசிரியர் ஒருவரின் வீட்டில் புகுந்த கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பினை வனத்துறையினர் பிடித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாடகளாக பரவலாக பெய்து வரும் மழை காரணமாக விஷப் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து‌ள்ளனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் வசித்து வரும் ஆசிரியர் மகேந்திரனின் வீட்டில் கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பு ஒன்று புகுந்தது. இதைப் பார்த்த ஆசிரியரின் மனைவி ராணி கூச்சலிட்டதை அடுத்து, அருகிலிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த வனத்துறையினர்‌, மலைப் பாம்பைப் போன்ற தோற்றமுடைய கட்டுவிரியன் பாம்பு கொடிய விஷத்தன்மை கொண்டது எனபதால் பொதுமக்கள் பாம்பை பிடிக்க முன்வர வேண்டாம் என எச்சரித்தனர்.

பின்னர்‌, வனக்காப்பாளர் கணபதி அந்த பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டார்.

இந்த குடியிருப்பு பகுதியில் மண்டிக்கிடக்கும் புதர்களை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என குடியிருப்புவாசிகளை வனத்துறைனர் கேட்டுக்கொண்டனர்.

இதே போல்‌, பூசாரிப்பட்டி அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த புள்ளி மான், சூசைராஜ் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர், அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர்‌, பொதுமக்களின் உதவியுடன் கிணற்றில் விழுந்த புள்ளிமானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top