Home
You Are Here: Home » News » தீக்குச்சி ஆலையில் தீ விபத்து

தீக்குச்சி ஆலையில் தீ விபத்து

கோவில்பட்டி அருகேயுள்ள தீக்குச்சி ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் எரிந்து‌ சேதமாயின.

தூத்து‌க்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்தவர் ஜெயபால். இவருக்கு சொந்தமான தீக்குச்சி ஆலை கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு பகுதியில் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை பெய்த கனமழையால் ஆலையில் மின்தடை ஏற்பட்டது. எனவே, முன் கூட்டியே தொழிலாளர்கள் ஆலையை மூடிவிட்டு சென்றுள்ளனர்.

ஆனால், இன்று அதிகாலை தீக்குச்சி ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழுந்து விட்டு எரிந்த தீயால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி, கழுகுமலையை சேர்ந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

எனினும் தீக்குச்சி ஆலையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள் மற்று‌ம் பொருட்கள் எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு‌ கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top