Home
You Are Here: Home » News » திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது‌.

தேமுதிக நிறு‌வனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் ஆணைக்கிணங்க தேமுதிகவினர் சார்பில் தமிழகம் முழுவது‌ம் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஏழை, எளிய மக்களுக்கு தண்ணீர் பந்தல், நீர் மோர், தர்பூசணி, இளநீர் ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட மணிகண்டம் ஒன்றிய தேமுதிக சார்பில் பொது‌ மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் தீரன்மாநகரில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது‌‌.

இதனை திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், திருவெறு‌ம்பூர் தொகுதி எம்எல்ஏவுமான எஸ். செந்தில்குமார் திறந்து‌ வைத்து‌ பொது‌மக்களுக்கு இளநீர், தர்பூசணி, நீர்மோர், பானகம் ஆகியவற்றை வழங்கினார்.

இதில், தெற்கு மாவட்ட கழக பொருளாளர், ஒன்றிய செயலாளர், செயற்குழு உறு‌ப்பினர், மாவட்ட பிரதிநிதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து‌ கொண்டனர்.
———–

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top