Home
You Are Here: Home » News » சிவகாசியில் சீனப் பட்டாசுகள் பறிமுதல்

சிவகாசியில் சீனப் பட்டாசுகள் பறிமுதல்

சிவகாசியில் சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சீனப் பட்டாசுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சீனப் பட்டாசுகளை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கடந்த மாதம் பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சிவகாசியில் உள்ள ஏராளமான பட்டாசு கடைகளில் சீனப் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து தமிழ்நாடு பட்டாசு தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பட்டாசு கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான கடையில் சீனப் பட்டாசுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் சீனப் பட்டாசுகளை இந்தியாவிற்குள் வர விடாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பட்டாசுத் தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் சீன பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
————–

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top