Home
You Are Here: Home » News » India » ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு – திமுக தரப்பு வாதம் எழுத்துபூர்வமாக இன்று தாக்கல்

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு – திமுக தரப்பு வாதம் எழுத்துபூர்வமாக இன்று தாக்கல்

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் திமுக தரப்பு வாதம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யப்படுகிறது.

கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த முதலமைச்சர் ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1997ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்ற ஜெயலலிதா, ஏராளமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்கள் தற்போதைய மதிப்பில் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக பெங்களூரு நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், தனது இறுதிகட்ட வாதத்தை அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் தொகுத்து அளித்துள்ளார்.

இதனிடையே, திமுக தரப்பு வாதம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பில் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யப்படுகிறது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் வரும் 19-ம் தேதி தங்களது தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
———

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top