Home
You Are Here: Home » News » உதகையில் படுகர் நலச் சங்க கட்டிடத்திற்கு சீல் வைப்பு

உதகையில் படுகர் நலச் சங்க கட்டிடத்திற்கு சீல் வைப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் இளம் படுகர் நல சங்க விவகாரத்தில் தி‌.மு.க.மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டதால் படுகர் நலச் சங்க கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இளம் படுகர் சமுதாய மக்கள் நல சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் வழக்கம்போல் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி நடைபெற்ற தேர்தலில் திமுக உறுப்பினர் குண்டன் வெற்றி பெற்றார். இதற்கிடையே மே 15ம் தேதி உலக படுகர் தினத்தை கொண்டாட சங்க தலைவரின் அனுமதியின்றி அதிமுக உறுப்பினர்கள் அங்கு ஆலோசனை கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் அங்கு வந்த போலீசாருக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் கட்டிடத்திற்குள் இருந்த அ.தி.மு.கவினர் அனைவரையும் காவல்துறையினர் வெளியேற்றினர். இதனையடுத்து பொதுமக்களின் நலன் கருதியும்‌, சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டும் படுகர் நலச் சங்கத்திற்கு மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக உதகையில் பதற்றம் நிலவி வருகிறது.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top