Home
You Are Here: Home » News » திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர்‍.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் மிக முக்கிய திருவிழாக்களில் சித்ரா பவுர்ணமி திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டு சித்திரை மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் வருவதால் இக்கோயிலின் ஆகம விதிகளின்படியும், நடைமுறை வழக்கங்களின்படியும் இரண்டாவதாக வரும் பவுர்ணமியே சித்ரா பவுர்ணமியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் இரண்டாவது பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர்‍.

சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள 14 கிலோ மீட்டர் தூர கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை தரிசித்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். இதேபோன்று தமிழக கேரள எல்லையில் உள்ள மங்களா தேவி கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிச்சாமி, இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் அஜித் பட்டோல் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழாவினை தமிழக அரசு அதிகாரிகளுடன் மங்களா தேவி கண்ணகி அறக்கட்டளையும் இணைந்து நடத்துகின்றன‍.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top