Home
You Are Here: Home » News » Karnataka » தமிழக கர்நாடக எல்லையில் விபத்து – 3 பேர் பலி

தமிழக கர்நாடக எல்லையில் விபத்து – 3 பேர் பலி

தமிழக கர்நாடக எல்லையில் தாறுமாறாக ஓடிய லாரியால் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பலியானார்கள். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்..

கர்நாடக எல்லை பகுதி வழியாக சென்று கொண்டிருந்த கண்டெயன்ர் லாரி ஒன்று தாறுமாறாக ஓடியது. அப்போது, எதிரே வந்த வாகனங்கள் மீதும், சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீதும் லாரி மோதியது. இதையடுத்து அங்கிருந்த தடுப்பு சுவர் மீது லாரி மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரி ஓட்டுனரை தாக்கியதோடு, லாரிக்கு தீவைத்தனர். அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் லாரியில் ஏற்பட்ட தீயை உடனடியாக அணைத்தனர். மேலும் லாரி ஓட்டுனரை கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.. 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் 18 இருசக்கர வாகனங்கள் மற்றும் 5 நான்கு சக்கர வாகனங்கள் சேதமடைந்தது. விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் குடிபோதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த விபத்து காரணமாக அத்திப்பள்ளி சர்ஜாபுரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top