Home
You Are Here: Home » News » Tamil Nadu » Coimbatore » 4 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற 16 பேர் கைது

4 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற 16 பேர் கைது

கோவையில் உள்நாட்டு சரக்கு முனையத்தில் வைக்கப்பட்டிருந்த 4 கோடி ரூபாய் மதிப்பிலான 6 டன் செம்மரக்கட்டைகளை கொள்ளையடித்த 16 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடந்த ஜனவரி மாதம் தூத்துக்குடி வழியாக வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த 9டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, இருகூர் பகுதியில் உள்ள உள்நாட்டு சரக்கு முனையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி லாரியில் வந்த மர்மநபர்கள் சிலர், காவலாளிகளை தாக்கிவிட்டு, கண்டெய்னரில் இருந்த 4 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில், கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த புண்ணியமூர்த்தி தலைமையிலான கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து புண்ணியமூர்த்தி உள்பட அவரது கூட்டாளிகள் 15பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 6 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் அரக்கோணம் அருகே போலி மதுபாட்டில்களை கடத்த முயன்ற 7பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top