Home
You Are Here: Home » News » இறைச்சிக்காக விற்கப்படும் ஜல்லிக்கட்டுகாளைகள்

இறைச்சிக்காக விற்கப்படும் ஜல்லிக்கட்டுகாளைகள்

மணப்பாறை மாட்டுச்சந்தைக்கு விற்பனைக்காக வந்த பெருமளவு ஜல்லிக்கட்டுகாளைகள், இறைச்சிக்காக அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டது‌.

சமீபத்தில் ஜல்லிக்கட்டு காளைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது‌. இதன் எதிரொலியாக ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் தங்களது‌ காளைகளை விற்று‌ வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், மணப்பாறை வாரச்சந்தையில், ஜல்லிக்கட்டு காளைகள் இறைச்சிக்காக அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

காளைகள் விற்பனை செய்யப்படுவதால், எதிர்காலத்தில் காளைகளின் இனமே அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிராணிகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடை தென்மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜல்லிக்கட்டு மீதான தடை எதிரொலியாக காளை உரிமையாளர்கள் தங்களது காளை மாடுகளை இறைச்சிக்காக அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்ய துவங்கியுள்ளனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top