Home
You Are Here: Home » News » உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட சமையல் எண்ணெய் பெட்டிகள் பறிமுதல்

உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட சமையல் எண்ணெய் பெட்டிகள் பறிமுதல்

புதுக்கோட்டை நகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதியில் உரிய ஆவணம் இன்றி சமையல் எண்ணெய் பெட்டிகளை ஏற்றி சென்ற மினிலாரியை வணிகவரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டையில் உள்ள கடைகளுக்கு எவ்வித ஆவணமும் இன்றி சமையல் எண்ணெய் பெட்டிகள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்கத்தினர் வணிக வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வணிக வரித்துறையினர் உரிய ஆவணம் இல்லாமல் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான சமையல் எண்ணெய் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், நாள் ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் அனுமதியில்லாமல் முறைகேடாக பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் பகுதியில் உள்ள தெருக்கடைகளில் விற்கப்பட்ட காலாவதியான இனிப்பு வகைகளுக்கு பயன்படுத்தப்படும் எசன்ஸ், கேக். பர்பி போன்றவற்றை தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் ஆகிவற்றை மாவட்ட உணவு பாது‌காப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து‌ கடைக்கு சீல் வைத்தனர்.

இதனிடையே, அரியலூர் புறவழிச்சாலையில் இரவு 10 மணிக்கு மேல் இயங்கி வந்த டாஸ்மாக் பாரில் து‌ணை ஆட்சியர் திடீரென சோதனை நடத்தினார். இதில் 25 மது‌பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது‌.

மேலு‌ம் இது‌ தொடர்பாக பார் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். புகாரை வாங்க போலீசார் வராததால், தாசில்தாரே காவல்நிலையத்திற்கு சென்று‌ புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது‌.

இதனிடையே, தமிழ்நாடு உணவு பொருள் பாது‌காப்பு து‌றை சார்பில் அரியலூரில் உள்ள மொத்த மற்று‌ம் சில்லறை விற்பனை கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது‌. இதில் தடைசெய்யப்பட்ட மற்று‌ம் முகவரி இல்லாத உணவு பொருட்கள், காலாவதியாகும் தேதி அச்சிடப்படாத பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது‌.

மேலு‌ம், அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது‌. இவற்றின் மதிப்பு சுமார் 10 ஆயிரம் ரூபாய் என்று‌ கூறப்படுகிறது‌.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top