Home
You Are Here: Home » News » Tamil Nadu » Namakkal » நாமக்கல் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு‌

நாமக்கல் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு‌

அரசு வழக்கறிஞரை வாக்கு எண்ணிக்கை முகவராக நியமனம் செய்த நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சுந்தரத்தை தகுதி நீக்க செய்ய வேண்டும் என தேமுதிக வேட்பாளர் எஸ்.கே.வேல், மாவட்ட ஆட்சியரிடம் மனு‌ அளித்து‌ள்ளார்.

நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.சுந்தரம், தேர்தல் ஆணையத்தின் விதிமுறையை மீறி அரசு வழக்கறிஞர் எஸ்.சுரேஷ்குமாரை தமது தேர்தல் முகவராக நியமித்துள்ளார்.

அத்துடன் அரசு வழக்கரிஞர் எஸ்.சுரேஷ்குமார், ராசிபுரம் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக பணியாற்றுகிறார் என்றும், அவ்வாறு அரசுப் பணியில் உள்ளவரை தேர்தல் முகவராக நியமிப்பது தேர்தல் ஆணைய விதிமுறைக்கு புறம்பானது என்றும் அவர் புகார் கூறியுள்ளார்.

எனவே, தேர்தல் ஆணைய விதிமுறையை மீறிய அதிமுக வேட்பாளர் பி.ஆர்.சுந்தரத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தியிடம், நாமக்கல் தேமுதிக வேட்பாளர் எஸ்.கே.வேல் புகார் மனு அளித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் மீதான புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி, இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததாகவும் எஸ்.கே.வேல் தெரிவித்தார்.

முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே காஞ்சிபுரத்தில் அதிமுக பிரமுகர் வெற்றி பெற்றதாக அதிமுகவினர் பேனர்கள் வைத்தனர்.

இது போன்று தேர்தல் ஆணையத்தின் விதிமுறையை மீறி அதிமுகவினர் நாளுக்கு நாள் அத்துமீறி நடந்துகொண்டு வருவது குறிப்பிடதக்கது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top