Home
You Are Here: Home » News » India » மைசூர் அருகே சுற்றுலா வேன் மீது கேஸ் டேங்கர் லாரி மோதி விபத்து – 9 பேர் பலி

மைசூர் அருகே சுற்றுலா வேன் மீது கேஸ் டேங்கர் லாரி மோதி விபத்து – 9 பேர் பலி

கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே சுற்றுலா வேன் மீது கேஸ் டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு ஒரு வேனில் 16 பேர், கர்நாடக மாநிலம் மங்களூர் திரும்பி கொண்டிருந்தனர். மைசூர் அருகே பிரியாபட்டணம் என்ற இடத்தில் அதிகாலை வேன் சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கேஸ் டேங்கர் லாரி, எதிர்பாரத விதமாக திடீரென்று வேன் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த 3 தம்பதிகள் மற்றும் அவர்களது 3 குழந்தைகள் என 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து அறிந்து‌ சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூரை அடுத்த வானமா தேவி பகுதியில் டாட்டா ஏஸ் வாகனம் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 6 குழந்தைகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரவாண்டி குடும்பத்தினர் மற்று‌ம் உறவினர்கள் சுமார் 25 பேர் டாட்டா ஏஸ் வாகனம் மூலம் குல தெய்வ கோவிலு‌க்கு சென்றனர்.

அதன்பின்னர் வீடு திரும்பும்போது‌ எதிர்பாராத விதமாக அத வாகனம் மரத்தில் மோதி விபத்து‌க்குள்ளானது‌. இதில், 9 குழந்தை உள்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் இருவரது‌ உடல்நிலை கவலைகிடமாக உள்ளது‌.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top