Home
You Are Here: Home » News » காவல்துறையினர் போல் நடித்து தொடர் வழிப்பறி – 3 பேர் கைது

காவல்துறையினர் போல் நடித்து தொடர் வழிப்பறி – 3 பேர் கைது

பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறையினர் போல் நடித்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3பேர் கைது செய்யப்பட்டனர்.

பொன்னேரியை அடுத்த தேவதானம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் மர்மநபர்கள் சிலர் காவல்துறையினர் போல் நடித்து, பால் வண்டி ஓட்டுனரிடம் சுமார் 79 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தனர். இதேபோல் சோழவரம், திருப்பாலைவனம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் வந்ததைதொடர்ந்து, காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் காவல்துறையினர் போல் நடித்து பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மணிமாறன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மணிமாறன் அளித்த தகவலின்பேரில், அவரது கூட்டாளிகள் எழிலரசன், சுகுமாறன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடமிருந்து 8 சவரன் நகை, 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், இரண்டு இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top