Home
You Are Here: Home » News » நெல்லை அருகே குடும்பதகராறில் ஆசிட் வீச்சு

நெல்லை அருகே குடும்பதகராறில் ஆசிட் வீச்சு

நெல்லையில் குடும்பதகராறில் மனைவி மீது கணவன் அமிலும் வீச முயற்சித்தபோது, அதனை தடுக்க முயன்றவர்கள் மீது அமிலம் பட்டத்தில் சிறுமி உள்பட 6பேர் காயம் அடைந்தனர்.

நெல்லை மேலப்பாளையம் ஆமின்புரதத்தை சேர்ந்தவர் சேக்மைதீன். இவர் கழிவுநீர் மணலில் தங்கம் உள்ளதா என அறிந்து அதனை சேரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக வீரியம் குறைந்த அமிலங்களை இவர் வைத்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு குடிபோதையில் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த சேக்மைதீன், வீரியம் குறைந்த அமிலத்தை மனைவி மீது வீச முயற்சித்துள்ளார்.

அப்போது, அதனை தடுக்க முயன்றவர்கள் மீது அமிலம் பட்டத்தில் 10வயது சிறுமி உள்பட 6பேர் காயம் அடைந்து, சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேக்மைதீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top