Home
You Are Here: Home » News » India » நதிகளை இணைக்க மத்தியில் அமைய உள்ள புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை

நதிகளை இணைக்க மத்தியில் அமைய உள்ள புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை

தென்னக நதிகளை இணைக்க மத்தியில் அமைய உள்ள புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட குப்பனூரில் தமிழக விவசாயிகள் சங்க கிளையின் 5ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்ஏ சின்னசாமி, கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்கள் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை வழங்காமல் தமிழகத்தை பாலைவனமாக மாற்றும் வகையில் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

மேலும் தமிழகத்தில் நிலவும் வறட்சியை போக்க, தென்னக நிதிகளை இணைக்க வேண்டும் என்றும் இதற்கு புதிதாக பொறுப்பேற்க உள்ள மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தென்தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் முல்லை பெரியாறு அணை திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சின்னசாமி கோரிக்கை விடுத்தார்.

தமிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக சேதமடைந்த பயிர்களுக்கு, உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என சின்னசாமி வலியுறுத்தினார்.

About The Author

Number of Entries : 5564

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top