Home
You Are Here: Home » News » Tamil Nadu » Karur » தேர்தல் பணியில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் ஆர்ப்பாட்டம்

தேர்தல் பணியில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் ஆர்ப்பாட்டம்

கரூரில் தேர்தல் பணியில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவி அலுவலர்களுக்கு உரிய ஊதியம் வழங்காததைக் கண்டித்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மாதம் 24-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஆயிரம் ரூபாயும்‌, உதவி அலுவலர்களுக்கு 600 ரூபாயும் ஊதியமாக வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

ஆனால் உரிய ஊதியத்தை வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மறுத்ததால்‌, பாதிக்கப்பட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட அலுவலர்கள், கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும்‌, வாக்குச் சாவடிக்கு தேவையான மேஜை, நாற்காலி, மின்விசிறி மற்றும் கோடை பந்தல் அமைத்ததற்கான தொகையை வழங்கவும்‌, தமிழக அரசு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

இதபோல், திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள்‌, தேர்தல் பணிப்படியையும்‌, வாக்குச்சாவடி அமைப்பு செலவையும் குறைத்து வழங்க உத்தரவிட்ட தேர்தல் ஆணையத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கிராம நிர்வாக அலுவலர்கள்‌, வாக்குச்சாவடி அமைப்பதற்காக 2500 ரூபாய் வரை செலவு செய்தபோதிலும்‌, ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்து‌ தேர்தல் ஆணையத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல்‌, நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கிராம நிர்வாக அலுவலர்கள், தேர்தல் அலுவலக பணியில் ஈடுபட்டதற்கான உரிய தொகையை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top