Home
You Are Here: Home » News » India » உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மனு தாக்கல் – கேரள அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மனு தாக்கல் – கேரள அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்க அளவை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கேரள அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்தலாம் எனவும், கேரள அரசின் அணை பாதுகாப்பு சட்டம் செல்லாது எனவும் கடந்த 7ம் தேதி உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு குறித்து கேரள சட்டசபையை கூட்டி விவாதிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கூறியிருந்தார்.

அதன்படி முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் திருவனந்தபுரத்தில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் உள்பட அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பிறகு உம்மன் சாண்டியும், அச்சுதானந்தனும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மறுஆய்வு மனு அல்லது மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற அச்சுதானந்தனின் கருத்தை அனைத்துக் கட்சிகளும் ஏற்று கொண்டதாக உம்மன் சாண்டி கூறினார்.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top