Home
You Are Here: Home » News » வாலாஜா அருகே நகைக்காக 8 வயது சிறுமி கொலை

வாலாஜா அருகே நகைக்காக 8 வயது சிறுமி கொலை

வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே அரை சவரன் நகைக்காக 8 வயது சிறுமியை கொலை செய்து உடலை கிணற்றில் வீசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாலாஜா அருகே உள்ள வன்னியமேடு மோட்டூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகத்தின் மகள் வினிதா. 8 வயது சிறுமியான இவர், கோடை விடுமுறைக்காக அரக்கோணம் அருகே பெருமாள்பேட்டை கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தார்.

அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுமி வினிதாவை திடீரென்று காணவில்லை. இந்நிலையில் குழந்தை வினிதா இன்று வீடு அருகே உள்ள கிணற்றில் பிணமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி, சிறுமியின் உடலை மீட்டபோது அவரது இரு காதுகளும் துண்டிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

காதில் அணிந்திருந்த அரை சவரன் நகைக்காக சிறுமியை கடத்தி கொலை செய்து பிணத்தை கிணற்றில் வீசியிருப்பதும் தெரியவந்தது.

சிறுமியை நகைக்காக கொலை செய்து பிணத்தை கிணற்றில் வீசிய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top