Home
You Are Here: Home » News » குடியாத்தம் வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

குடியாத்தம் வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதால் வனப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அமைந்துள்ள வனப்பகுதி தமிழகத்தின் மிகப்பெரிய வனப்பகுதிகளில் ஒன்றாகும். இவ்வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

7-க்கும் அதிகமான சிறுத்தைகள் அப்பகுதியில் உலவுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். 8-க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 2 மாடுகளை இதுவரை சிறுத்தைகள் வேட்டையாடியுள்ளன. இதனை அடுத்து, வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று பொதுமக்களை வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

சிறுத்தையை பிடிக்க வனப்பகுதியில் கூண்டுகள் வைக்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் குடியாத்தம் வனப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

சைனகுண்டா, மோர்தனா வனப்பகுதியில் சிறுத்தையின் கால்தடங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top