Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nagapattinam » நாகை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து – ஒருவர் பலி

நாகை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து – ஒருவர் பலி

நாகை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வேனும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாகையிலிருந்து காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்த வேன், பெருங்கடம்பனூர் பாலம் அருகே எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த எடையூர் கிராமத்தை சேர்ந்த வீரப்பன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்..

அவருடன் வந்த தர்மராஜ் பலத்த காயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையிலிருந்து தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து நாகூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top