Home
You Are Here: Home » News » செய்யாறு அருகே ஆசிரியர் வீட்டில் கொள்ளை

செய்யாறு அருகே ஆசிரியர் வீட்டில் கொள்ளை

செய்யாறு அருகே ஆசிரியர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 25 சவரன் நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணப்பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வேல்சோமசுந்தரம் பகுதியைச் சேர்ந்தவர் யாசோதா. அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், ஆரணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், பீரோவிலிருந்து 25 சவரன் நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அத்துடன் மோப்பநாயின் கவனத்தை திசை திருப்ப வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவியுள்ளனர். பக்கத்து வீட்டுக்காரர் அளித்த தகவலின் பேரில் வீடு திரும்பிய யசோதா நகைகளை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்‍.

இதுகுறித்து யசோதா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top