Home
You Are Here: Home » News » India » முல்லை பெரியாறு தீ்ர்ப்பு தொடர்பாக கேரளாவில் அனைத்து கட்சி கூட்டம்

முல்லை பெரியாறு தீ்ர்ப்பு தொடர்பாக கேரளாவில் அனைத்து கட்சி கூட்டம்

முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடிவரை உயர்த்தலாம் என்ற உச்சநீதிமன்ற தீ்ர்ப்பையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் இன்று அம்மாநில அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்தலாம் எனவும், கேரள அரசின் அணை பாதுகாப்பு சட்டம் செல்லாது எனவும் கடந்த 7ம் தேதி உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் முழு அடைப்பு நடத்தப்பட்டது.

அத்துடன் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து கேரள சட்டசபையை கூட்டி பற்றி விவாதிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கூறியிருந்தார்.

இந்நிலையில் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு திருவனந்தபுரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top