Home
You Are Here: Home » News » சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 153 யூனிட் மணல் பறிமுதல்

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 153 யூனிட் மணல் பறிமுதல்

பொன்னேரி அருகே பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 153 யூனிட் மணலை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள நாலூர் பகுதயில் சட்டவிரோமாக மணல் அள்ளுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினர், அங்குள்ள 6 இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மணலை பறிமுதல் செய்தனர். இதேபோல் வன்னிப்பாக்கம் பகுதியில் நான்கு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, இரண்டு டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்..

மொத்தம் 10 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 153 யூனிட் மணல் லோடுகளை பொதுப்பணித்துறையினர் சம்பவ இடத்திலேயே ஏலம் விட்டனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top