Home
You Are Here: Home » News » விழுப்புரத்தில் நாளை மிஸ் கூவாகம் அழகிப்போட்டி

விழுப்புரத்தில் நாளை மிஸ் கூவாகம் அழகிப்போட்டி

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அரவாணிகளுக்கான மிஸ் கூவாகம் அழகிப்போட்டி விழுப்புரத்தில் நாளை நடைபெறுகிறது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசியாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான அரவாணிகள் தாலிகட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி வருகிற 13ம் தேதியும், கூத்தாண்டர்வர் கோவில் தேர் திருவிழா வருகிற 14ம் தேதியும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலில் இருந்தும், மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வருகை புரியும் அரவாணிகளை ஊக்குவிக்கும் வகையில் வருகிற 12ம் தேதி விழுப்புரத்தில் மிஸ்கூவாகம் அழகிப்போட்டி நடைபெறுகிறது.

மிஸ்கூவாகம் அழகிப்போட்டி 33 மாவட்ட அரவாணிகள் சங்கம் சார்பில் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top