Home
You Are Here: Home » News » வெடிபொருட்களுடன் சுற்றித்திரிந்த மர்மநபர் கைது

வெடிபொருட்களுடன் சுற்றித்திரிந்த மர்மநபர் கைது

அரக்கோணம் ரயில் நிலையத்தில் வெடிபொருட்களுடன் சுற்றித்திரிந்த மர்மநபரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

அரக்கோணம் ரயில்வே நிலையத்தில் போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த வடமாநிலத்தை சேர்ந்தவரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அரைக்கிலோ சிவப்பு பாஸ்பரஸ் மற்றும் வெடிபொருட்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இதனை அடுத்து, தக்கோலம் காவல்நிலையத்தில் வைத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

வேலூர் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், வடக்கு மண்டல ஐ.ஜி தமிழ்சந்திரன் ஆகியோர் அவனிடம் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் வெடிமருந்துடன் கைதானவரின் பெயர் மொபிபுல்லா என்பதும், அவன் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனிடையே, அரக்கோணம் பகுதியை சேர்ந்த மேலும் 3 பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட வெடிமருந்துகள் கொண்டு வரப்பட்டதா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top