Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanchipuram » தேர்வில் தோல்வி மாணவி தற்கொலை

தேர்வில் தோல்வி மாணவி தற்கொலை

ஸ்ரீபெரும்பத்தூர் அருகே, பன்னிரென்டாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்பத்தூர் அருகே வடகால் கிராமப் பகுதியைச் சேர்ந்த வீரராகவன், லாத தம்பதியினரின் மகள் கெளசல்யா. இவர் தெரசாபுரத்தில் உள்ள லிட்டில் பிளவர் உயர்நிலைப்பள்ளியில் பன்னிரென்டாம் வகுப்பு படித்துவந்தார். அவருடன் சேர்ந்து வடகால் கிராமத்தில் 6 பேர் பொதுத்தேர்வு எழுதினர்.

இந்நிலையில்‌, நடந்து முடிந்த பொதுத் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியான நிலையில்‌, கெளசல்யாவைத் தவிர மற்ற 5 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

ஆனால் கணித பாடத்தில் தேர்ச்சி பெறாத கெளசல்யா மனமுடைந்து விஷத்தைக் குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்ரீபெரும்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கெளசல்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக ஒரகடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top