Home
You Are Here: Home » News » Tamil Nadu » Cuddalore » அதிமுக பிரமுகருக்கு சொந்தமான மருத்துவமனை ஸ்கேன் சென்டர் சீல் வைப்பு

அதிமுக பிரமுகருக்கு சொந்தமான மருத்துவமனை ஸ்கேன் சென்டர் சீல் வைப்பு

நெய்வேலியில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான மருத்துவமனை ஸ்கேன் சென்டரில் கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என பார்த்து கருக்கலைப்பு நடந்ததையடுத்து ஸ்கேன் சென்டர் சீல் வைக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மாவட்ட அதிமுக மருத்துவ அணி செயலாளர் ராமசந்திரனுக்கு சொந்தமான மருத்துவமனை ஸ்கேன் சென்டர் உள்ளது. இந்த ஸ்கேன் சென்டரில் கருவுற்ற தாய்மார்களுக்கு ஸ்கேன் செய்து கருவிலிருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என பார்த்து கருக்கலைப்பு செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த புகாரின்பேரில் இந்த ஸ்கேன் செண்டரை கடலூர் மாவட்ட மருத்துவதுறை இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 7 பேர்கொண்ட அதிகாரிகள குழுவும், சுகாதாரத்துறை லஞ்சஒழிப்புதுறையினர் அடங்கிய குழுவும் திடீர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது அகஸ்தியா என்ற பெண்ணுக்கு ஸ்கேன் செய்து பார்த்து கருக்கலைப்பு செய்ய தயாராக இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் குழுவின் உத்தரவின்படி விருத்தாசலம் வட்டாட்சியர் விஸ்வநாதன் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top