Home
You Are Here: Home » News » மானூர் அருகே பஞ்சாயத்து தலைவியின் கணவர் வெட்டி கொலை

மானூர் அருகே பஞ்சாயத்து தலைவியின் கணவர் வெட்டி கொலை

நெல்லை மாவட்டம் மானூர் அருகே பஞ்சாயத்து தேர்தலில் ஏற்பட்ட மோதலில் பழிக்கு பழி வாங்கும் விதமாக பஞ்சாயத்து தலைவியின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ள சேதுராயன்புதூரில் பஞ்சாயத்து தலைவியாக உள்ளவர் ஜெயராணி. இவரது கணவர் பொன்னுசாமிக்கும், பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான ராமசந்திரன் என்பவருக்கும் இடையே பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ராமசந்திரன் படுகொலை செய்யப்பட்டார். இவ்விவகாரத்தில் பொன்னுசாமி உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பொன்னுசாமி ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில், சேதுராயன்புதூர் நூலகத்திற்கு வந்திருந்த பொன்னுசாமி மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

இதனால், அங்கு போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top