Home
You Are Here: Home » News » Tamil Nadu » Namakkal » சேலம் மற்றும் நாமக்கலில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது‌

சேலம் மற்றும் நாமக்கலில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது‌

தேர்தல் ஆணையத்தின் உத்தரவை தொடந்து, சேலம் மற்றும் நாமக்கலில் தலா ஒரு வாக்குச்சாவடியில் தற்போது‌ மறுவாக்குப்பதிவு தொடங்கியது‌.

சேலம் மக்களவை தொகுதிக்கான தேர்தல் கடந்த 24ம் தேதி நடந்து முடிந்தது. பதிவான வாக்குகள் சேலம் கருப்பூர் கல்லூரி மையத்தில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் கணகாணிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சேலம் வடக்கு தொகுதிக்குட்பட்ட பொன்னம்மாபேட்டை 213வது வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது..

இதையடுத்து அந்த வாக்குசாவடியில் கடந்த 8 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். அதற்கான பணிகள் அணைத்தும் தயார் நிலையில் இருந்தும், திடீரென்று மறு தேர்தல் 10 ஆம் தேதிக்கு‌ ஒத்திவைப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அறிவித்தார்.

அதன்படி 10 ஆம் தேதியான இன்று‌ சேலம் தொகுதியில் உள்ள பொன்னம்மாபேட்டை 213வது வாக்குச்சாவடியில் தற்போது‌ மறுவாக்குப்பதிவு தொடங்கியது‌. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாது‌காப்பு போடப்பட்டுள்ளது‌.

இதேபோல் நாமக்கல் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மல்லசமுத்திரம் பேரூராட்சி கோட்டப்பாளையம் 37வது வாக்கு சாவடியிலு‌ம் தற்போது‌ மறுவாக்குப்பதிவு தொடங்கியது‌.

வாக்குச்சாவடியை சுற்றிலும் பலதத் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

மறுவாக்குப்பதிவின்போது அசம்பாவிதங்களை தடுக்க மத்திய ரிசர்வ்போலீசாரும், உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top