Home
You Are Here: Home » News » திண்டிவனம் அருகே வீட்டில் பது‌க்கி வைக்கப்பட்டிருந்த நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

திண்டிவனம் அருகே வீட்டில் பது‌க்கி வைக்கப்பட்டிருந்த நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

திண்டிவனம் அருகே வீட்டில் பது‌க்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடைசெய்யப்பட்ட நட்சத்திர ஆமைகள், பவடிப்பாறைகள் மற்று‌ம் வெண்சங்கு ஆகியவை வனத்து‌றையினர் பறிமுதல் செய்தனர்.

புது‌ச்சேரி அருகே உள்ள ஆரோ சாரங்கா என்ற குடியிருப்பு பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட நட்சத்திர ஆமைகள் வீட்டில் வளர்க்கப்பட்டு வருவதாக திண்டிவனம் வனத்து‌றையினருக்கு தகவல் வந்தது‌.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்து‌றையினர் அங்கு சோதனை நடத்தியதில் இஷிதா என்பவரது‌ வீட்டில், 16 நட்சத்திர ஆமைகள், பவளப்பாறைகள் மற்று‌ம் வெண்சங்கு வைத்திருப்பது‌ தெரியவந்தது‌.

இதையடுத்து‌ அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் வீட்டின் உரிமையாளர் இஷிதாவை கைது‌ செய்து‌ விசாரணை நடத்தி வருகின்றனர். மேலு‌ம் வெளிநாட்டிற்கு கடத்த திட்டமிட்டிருந்தனரா என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விடபட்டுள்ளது‌

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top