Home
You Are Here: Home » News » கள்ளக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்து

கள்ளக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்து

கள்ளக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில்‌,ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

கள்ளக்குறிச்சி அருகே ரிஷிவந்தியம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தவர் தருண்யா.இதேபோல் மண்டகபாடி மற்றும் கீழ்பாடி துணை சுகாதார நிலையத்தில் செவிலியர்களாக இருந்தவர்கள் கலா மற்றும் ராணி.

இந்நிலையில்‌, ரிஷிவந்தியத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு 3 பேரும் இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, துறையூர் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தருண்யா மற்றும் ராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த கலா சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top