Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dharmapuri » பாலக்கோட்டில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சிறைவைப்பு

பாலக்கோட்டில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சிறைவைப்பு

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பிஎஸ்என்எல் ஊழியர்களை அலு‌வலகத்தின் உள்ளே வைத்து‌ பூட்டி சிறைவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது‌.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு அலு‌வலகம் உள்ளது‌. இந்த அலு‌வலகத்தில் 55 ஊழியர்கள் பணிபுரிந்து‌ வருகின்றனர்.

இந்நிலையில் பிஎஸ்என்எல் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 24 ஊழியர்கள் உயர்அதிகாரிகளின் அனு‌மதியோடு அலு‌வலகத்தில் மே தின கிளை கூட்டத்தை நடத்தி உள்ளனர்.

இதனை பொறு‌த்து‌க்கொள்ளமுடியாத உட்கோட்ட பொறியாளரான சத்யேந்திரன் 24 ஊழியர்களையும் வெளியே செல்லாதவாறு‌ முன்பக்க கேட்டினை பூட்டி சிறைவைத்து‌ சென்றதாக கூறப்படுகிறது‌.

தகவலறிந்து‌ சம்பவஇடத்திற்கு விரைந்த காவல்து‌றையினர் பூட்டை திறந்து‌ ஊழியர்களை விடுவித்தனர். ஊழியர்கள் சிறை வைக்கப்பட்ட சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது‌.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top