Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanchipuram » செங்கல்பட்டு அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது

செங்கல்பட்டு அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது

செங்கல்பட்டு அருகே பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 20 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்‍. அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை மடக்கி விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் மறைமலை நகர், கூடுவாஞ்சேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பூட்டிய வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டதும்‌, இரு சக்கர வாகன திருட்டு மற்றும் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இது தொடர்பாக அமீத் பாஷா, பார்த்திபன்‌,முத்து மற்றும் சுரேஷ் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர்‌, அவர்களிடமிருந்து சுமார் 20 சவரன் தங்க நகைகள்‌ மற்றும் இரு சக்கர வாகனம், உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து குற்றவாளிகள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top