Home
You Are Here: Home » News » செங்கம் காய்கறி மார்க்கெட்டில் வெடிகுண்டு மிரட்டல்

செங்கம் காய்கறி மார்க்கெட்டில் வெடிகுண்டு மிரட்டல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காய்கறி மார்க்கெட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்மநபர்கள் தொலைபேசியில் மிரட்டல் விடுத்த சம்பவம் பொது‌மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது‌.

சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களுக்கும் அடுத்தடுத்து‌ வரும் வெடிகுண்டு மிரட்டலால் பொது‌மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்று‌ அதிகாலை எப்போது‌ம் பரபரப்பாக காணப்படும் செங்கம் காய்கனி மண்டிக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் வந்தள்ளது‌.

இதையடுத்து‌, வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது‌வரை எந்த தடயமும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளையும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்‌. மேலும் பாது‌காப்பு பணியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு மிரட்டலால் செங்கம் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் இது‌போன்று ‌நாள்தோறு‌ம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளநிலையில், சட்டம் ஒழுங்கை சீர்செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா இது‌வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று‌ சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top