Home
You Are Here: Home » News » நிவாரண உதவி வழங்ககோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

நிவாரண உதவி வழங்ககோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

நெல்லையில் சூறைகாற்றினால் சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரண உதவி வழங்ககோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நெல்லை வீ.கே புதூர் தாலுகா பகுதியில் கடந்த மாதம் 23ம் தேதி சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதமடைந்தது.

இந்நிலையில் சேதமடைந்த வாழை மரங்களுக்கு நிவாரண உதவி வழங்ககோரி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாடசாமி தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்‍.

சேதமடைந்த வாழை மரங்களை ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைத்து, விரைவில் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்‍.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top