Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nagapattinam » வேதாரண்யம் அருகே கடல்சீற்றம்

வேதாரண்யம் அருகே கடல்சீற்றம்

கடல்சீற்றம், கொந்தளிப்பு ஆகியவற்றால் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமத்தினர், ஐந்தரயிரம் பேர் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை கடற்கரையிலிருந்து, நேற்று முன்தினம் மதியம், 2 மணிக்கு, 10 படகில், 40 மீனவர்கள் கடலுக்கு பல்வேறு குழுவாக, மீன்பிடிக்க புறப்பட்டனர்.

ஆனால் இலங்கை அருகே வங்காள விரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்ததால் கடல் நேற்று கொந்தளிப்பாகவும், சீற்றமாகவும் காணப்பட்டது.

இதனால், நடுக்கடலில் படகுகளை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி மீன்பிடித்தொழிலை செய்ய முடியாமல் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் பரிதவித்தனர்.

காற்று பலமாக வீசியதால் கடலில் வலைவிரிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து, மீன்பிடிப்பதை நிறுத்தி விட்டு மீனவர்கள் ஆறுகாட்டுத்துறைக்கு நேற்றுக்காலை, 8 மணிக்கு படகுகளில் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதனிடையே கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த, 5,000 மீனவர்களும் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இதையடுத்து, இவர்களின் 600-க்கும் மேற்பட்ட சிறிய ரக பைபர் படகுகள், கட்டுமரங்களை பத்திரமாக, நங்கூரம் பாய்ச்சி கரையிலேயே நிறுத்தினர்.

இதனால், நேற்று வழக்கமான வருவாயை இழந்து, மீனவ குடும்பத்தினர் தவித்தனர். வேதாரண்யம், ஆயக்காரன்புலம், கோடியக்கரை, செம்போடை, தலைஞாயிறு, மணக்குடி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று பெய்த மழையால், கோடை வெப்பம் தணிந்து, மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top