Home
You Are Here: Home » News » மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட வேண்டும் – பழ.நெடுமாறன்

மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட வேண்டும் – பழ.நெடுமாறன்

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் நலனை பாதிக்கும் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்று உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் பேசிய அவர், தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கியது என்றும், இதனை அடியோடு அழிக்கும், நாசமாக்கும் முயற்சி தான் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் என்றும் தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் முழுமையாக பாலைவனமாகும் என்று தெரிவித்தார்.

மேலு‌ம், நிலத்தடி நீர் அடியோடு நாசமாகும் என்றும், லட்சக்கணக்கான விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வெளியேறும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்த பழ.நெடுமாறன், இத்திட்டத்தின் மூலம் அன்னிய நாட்டு நிறுவனம் மட்டுமே ஆதாயம் அடையும் என்றும், தமிழக மக்களுக்கு எந்தவித ஆதாயமும் கிடையாது என்றும் தெரிவித்தார்.

பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் மக்கள் திரண்டு போராடினால் தான் தடுத்து நிறுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மே 17 இயக்கம் சார்பில், மீத்தேன் திட்டம் மூலம் பாலைவனமாக்கும் காவிரி டெல்டா என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆவணப்படம் வெளியீட்டு விழா தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி ஆவணப்படத்தை வெளியிட்டார். பின்னர் ஆவணப்படம் அனைவருக்கும் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top