Home
You Are Here: Home » News » மணப்பாறை அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

மணப்பாறை அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

மணப்பாறை அருகே சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்‍.

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட மஞ்சம்பட்டி, தீராம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த பல மாதங்களாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தபட்ட அதிகாரிகளுடன் புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து குடிநீர் வழங்க வலியுறுத்திய பொதுமக்கள் ஒன்றிணைந்து திருச்சி- திண்டுக்கல் நான்குவழிச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்‍.

பொதுமக்களின் சாலைமறியல் குறித்து தகவல் அறிந்து வந்த மணப்பாறை நகராட்சி ஆணையர் சிவகுமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்‍.

சீரான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க அவர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்களின் சாலைமறியல் கைவிடப்பட்டது.

தேர்தலின் போது மட்டும் சீராக வழங்கப்பட்ட குடிநீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது ஏன் என்று மறியலின்போது பொதுமக்கள் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.S

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top