Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dindigul » ஊருக்குள் புகுந்த யானை கூட்டம்

ஊருக்குள் புகுந்த யானை கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே யானை கூட்டம் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்‍.

ஆத்தூர் அருகே கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் வனவிலங்குகள் அதிகம் காணப்படுவதாக கூறப்படுகிறது.

வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவுகள் தேடி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விளைப்பொருட்களை தின்று விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் அக்கரப்பட்டி விவசாய பகுதியில் புகுந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த விவசாயிகள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்தனர்‍.

குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்துள்ளதை அறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் யானைகளை விரட்ட முயன்றனர்.

காட்டு யானைகளின் நடமாட்டத்தால் அப்பகுதி விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்‍.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top