Home
You Are Here: Home » News » உளுந்தூர்பேட்டை அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து‌ சிதறியது

உளுந்தூர்பேட்டை அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து‌ சிதறியது

உளுந்தூர்பேட்டை அருகே நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து‌ சிதறியதால் மக்கள் அலறியடித்து‌ கொண்டு ஓடினர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கடைவீதியில், அதே கிராமத்தை சேர்ந்த முருகன், கலியன் உள்ளிட்ட 5 பேர் கோழிக்கடை, ஹோட்டல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நள்ளிரவில் இந்த கடைகளில் தீவிபத்து‌ ஏற்பட்டுள்ளது‌. இதனைகண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது‌ கடைகளில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் ஒன்று‌ பயங்கர சத்தத்து‌டன் வெடித்து‌ சிதறிதால் ‌தீயை அணைத்து‌கொண்டிருந்த பொது‌மக்கள் அலறியடித்து‌ கொண்டு ஓடினர்.

தகவலறிந்த தீயணைப்புது‌றையினர் விரைந்து‌ சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கடைகளில் இருந்த உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், கோழிகள் உட்பட 5 லட்சம் ரூபாய் மதிப்பில்‌ சேதம் ஏற்பட்டது‌.

இதேபோல் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து வளாகத்தில் ஏற்பட்ட திடீரி் தீ விபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் எரிந்து தீக்கரையாகின. இது மர்மநபர்களின் சதி வேலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top