Home
You Are Here: Home » News » Tamil Nadu » Ariyalur » செந்துறை அருகே மூதாட்டியை தாக்கி கொள்ளை

செந்துறை அருகே மூதாட்டியை தாக்கி கொள்ளை

செந்துறை அருகே தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி வீட்டில் இருந்த பீரோவை உடைத்து நகை மற்றும் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்‍.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நயினார் குடிக்காடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயியான இவர் தமது மனைவி சரோஜாவுடன் தனியாக வசித்து வருகிறார்‍.

இந்நிலையில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 4 சவரன் தங்க நகைகளை கொள்ளையிட்டுள்ளனர்‍.

வீட்டினுள் சத்தம் கேட்டு ஓடி வந்த சரோஜாவை தாக்கி அவர் அணிந்திருந்த தாலியை பறிக்க முயன்றுள்ளனர்‍. அவர் பலமாக சத்தமிடவே அவரை தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பியுள்ளனர்‍.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த 3 கிலோ வெடி மருந்து உள்ளிட்ட பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்‍. வளையபட்டி பகுதியை சேர்ந்த விவசாயியான பாலசுப்பரமணியம் தமது தோட்டத்தில் உள்ள பாறைகளை உடைக்க வெடிப்பொருட்களை வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அளவுக்கு அதிகமாக உரிய அனுமதியின்றி வெடிப்பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக கூறி காவல்துறையினர் அவரை கைது செய்து, வெடி பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்‍.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top