Home
You Are Here: Home » Cinema » 61-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா

61-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா

டெல்லியில் நேற்று‌ நடைபெற்ற 61-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

இந்த விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஷிப் ஆஃப் தீசியஸ் திரைப்படம் வென்றது.

சிறந்த நடிகருக்கான விருதை ஷாஹித் படத்தில் நடித்த ராஜ்குமார் யாதவ், மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமோடு ஆகிய இருவரும் பகிர்ந்துகொண்டனர்.

சிறந்த நடிகைக்கான விருதை லையர்ஸ் டைஸ் திரைப்படத்தில் நடித்த கீதாஞ்சலி தாபாவுக்கு வழங்கப்பட்டது .

தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த படத்திற்கான நர்கீஸ் தத் விருதை மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய தமிழ் படமான தலைமுறைகள் தட்டிச் சென்றது.

சிறந்த தமிழ்படத்திற்கான விருதை தங்க மீன்கள் திரைப்படம் தட்டிச் சென்றது. இந்த படத்தில் நடித்த சாதனா சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை வழங்கி பிரணாப் முகர்ஜி கெளரவித்தார்.

ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலை எழுதிய நா.முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பிரணாப் வழங்கினார். சிறந்த படத்தொகுப்பிற்கான விருது வல்லினம் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.

சிறந்த இசையமப்பாளருக்கான விருது ஜாட்டீஷ்வர் படத்திற்கு இசையமைத்த கபீர் சுமானுக்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் முக்கிய விருதான தாதாசாகேப் பால்கே விருது பாடல் ஆசிரியர் குல்சாருக்கு வழங்கப்பட்டது.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top