Home
You Are Here: Home » News » India » இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் அப்பதவியில் நீடிக்க வேண்டும் – யஷ்வந்த் சின்கா

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் அப்பதவியில் நீடிக்க வேண்டும் – யஷ்வந்த் சின்கா

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரான ரகுராம் ராஜன் அப்பதவியில் நீடிக்க வேண்டும் என்று பா.ஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.

“ரிசர்வ் வங்கி அதிகாரம் தன் கட்டுப்பாட்டில் இருந்தால், ரகுராம் ராஜனை ஆளுநர் பதவியில் நீடிக்க செய்வேன் என்று‌ம், அவர் சிறந்த பொருளாதார வல்லூநர் என்று நிரூபித்துள்ளதால், ஆளுநர் பதவியில் தொடர வேண்டும்” என்று சின்கா கூறினார்.

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரிசர்வ் வங்கி ஆளுநர் மாற்றப்படுவார் என்று பேசப்பட்டு வந்த நிலையில், சின்காவின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால் பொருளாதார வல்லுநர்களான ஜெகதீஷ் பகவதி, அரவிந்த் பனகாரியா ஆகியோர் பணியாற்ற ஆர்வம் காட்டுவது‌ குறித்து‌ செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சின்கா, இருவரும் உலகத்தரம் வாய்ந்த பொருளாதார வல்லுநர்கள் என்று‌ம், அவர்களிடம் இருந்து வரும் எந்த உதவியும் வரவேற்கப்படும்” என்றார்.

தங்கம் இறக்குமதி வரி குறைப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சின்கா, ‘லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு ஆதாரமாக விளங்கும் தங்க வணிகம் இப்போது அழிந்துவிட்டதாக கூறினார். எனவே, தங்கம் இறக்குமதி வரி விஷயத்தில் மாற்றம் தேவை” என்று தெரிவித்தார்.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top