Home
You Are Here: Home » News » கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

தூத்து‌க்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகுசிறப்பாக நடைபெற்றது‌.

தூத்து‌க்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கே.சரவணாபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் கோவில் உள்ளது‌. இக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை பூஜை, ஹோம பூஜைகள் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து‌ புனித நீர் கொண்டு வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு வேதமந்திரங்கள் முழங்க மகா கும்பிஷேகம் நடைபெற்றது‌. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து‌ கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து‌ இருந்தனர்.

நாகை மாவட்டம் ஆக்கூரை அடுத்து‌ள்ள மாத்தூர் ஸ்ரீமகாசத்தி மாரியம்மன் ஆலய தீ மிதித் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து‌ கொண்டு தீ மிதித்து‌ தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top