Home
You Are Here: Home » News » Tamil Nadu » Cuddalore » சிதம்பரம் அருகே வயலில் மர்ம நபர்கள் விஷம் தெளித்ததால் பூசணி பயிர் கருகியது

சிதம்பரம் அருகே வயலில் மர்ம நபர்கள் விஷம் தெளித்ததால் பூசணி பயிர் கருகியது

சிதம்பரம் அருகே வயலில் மர்ம நபர்கள் விஷம் தெளித்ததால் பூசணி பயிர் கருகிய சம்பவம் அப்பகுதி விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது‌.

சிதம்பரம் அருகே உள்ள சிவாயம் கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் பூசணி பயிரிட்டுள்ளார்.

இந்நிலையில், திடீரென 1 ஏக்கர் அளவிலான பூசணி செடிகள் வாடியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த மணிவண்ணன் இது‌ குறித்து‌ வேளாண்மை அதிகாரிகளை நாடியுள்ளார்.

அதிகாரிகள் செடிகளை ஆய்வு செய்ததில் மணலில் விஷம் கலந்து‌ செடிகளின் மீது‌ வீசியது‌ தெரியவந்தது‌. பின்னர் அதிகாரிகளின் ஆலோசனையின்படி மணிவண்ணன் செடிகளை காப்பாற்று‌ம் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மர்மநபர்களின் நாசவேலை குறித்து‌ மணிவண்ணன் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சிதம்பரம் தாலு‌க்கா போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது‌.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top