Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dharmapuri » தர்மபுரியில் தனியார் மில்லில் பயங்கர தீ விபத்து

தர்மபுரியில் தனியார் மில்லில் பயங்கர தீ விபத்து

தர்மபுரியில் தனியார் மர அரவை மில்லில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக மரங்கள் எரிந்து சேதமடைந்தன.

தர்மபுரியின் மையப்பகுதியில் அமைந்துள்ள அப்பாவு நகரில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான மர அரவை மில் இயங்கி வருகிறது‌.

இங்கு, தேக்கு, ரோஸ் உட், வேங்கை, பட்டாக் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக மரங்கள் அரவைக்காக கொண்டு வரப்பட்டு தேக்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மர அரவை மில்லில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மளமளவென மில் முழுவது‌ம் பரவிய தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது‌. இதில் மில்லில் இருந்த உயர் ரக மரங்கள் எரிந்து சேதமடைந்தன.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சுமார் ஒருகோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது‌.

இது‌ குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தர்மபுரி போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோல், ஆவடி சின்னம்மன் கோவில் அருகே இயங்கி வரும் பழைய இரும்பு மற்று‌ம் பேப்பர் பொருட்கள் சேகரிக்கும கிடங்கில் நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து‌ சாம்பலாகின.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top