Home
You Are Here: Home » News » கும்பகோணம் அருகே கோவில் விழாவில் பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி சாமி தரிசனம்

கும்பகோணம் அருகே கோவில் விழாவில் பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி சாமி தரிசனம்

கும்பகோணம் அருகே நடைபெற்ற கோவில் விழாவில், நூற்றுக்கணக்கான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி மடிப்பிச்சை வாங்கி உணவருந்தி சாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் அருகே உள்ள வேப்பத்தூரில் உள்ள அகஸ்தீஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசைக்கு மறுநாள் சீராளன் திருவிழா நடைபெற்று வருகிறது். இந்த திருவிழாவில் நவதானியங்கள் மற்றும் அரிசி, உளுந்து, மாவு உள்ளிட்ட பொருட்களை கொண்டு தயார் செய்யும் சீராளன் உருவத்தை ஊர்வலமாக கொண்டு வந்து, கோவிலில் சிறப்பு பூஜை செய்து அமுதுபடையல் விழா நடத்துவது வழக்கம்.

விழாவின் இறுதியில், வழங்கப்படும் சீராளன் பிரசாதத்தை உண்ணும் பக்தர்களு்ககு அடுத்த ஆண்டே குழந்தை பேறு கிட்டும் என்பது ஐதிகமாக கருத்பபடுகிறது.

இந்த ஆண்டு அமுது படையல் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு மடிப்பிச்சையாக அமுது படையலை வாங்கி சிறு குழந்தைகளுக்கு ஊட்டியதுடன், தாங்களும் சாப்பிட்டனர்.

இவ்விழாவை முன்னிட்டு வேப்பத்தூர் கிராமமே நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top