Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dharmapuri » தர்மபுரி அருகே குடிநீர்தட்டுப்பாட்டை போக்க, தேமுதிக சார்பில் குடிநீர் வினியோகம்

தர்மபுரி அருகே குடிநீர்தட்டுப்பாட்டை போக்க, தேமுதிக சார்பில் குடிநீர் வினியோகம்

தர்மபுரி அருகே குடிநீர்தட்டுப்பாட்டை போக்க, தேமுதிக சார்பில் டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் பணியை கழக சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

கோடைகாலத்தை முன்னிட்டு தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த், தமிழகம் முழுவதும் தேமுதிக நிர்வாகிகள், தங்கள் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறும், தண்ணீர் பந்தல் அமைத்து மக்களின் தாகம் தீர்க்குமாறும் ஆணையிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றிய பகுதியில் கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர்தட்டுப்பாட்டை போக்க இத் தொகுதி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கரன் தாம் பொறுப்பேற்ற நாளில் இருந்து டிராக்டர் மூலம் குடிநீ்ர் வழங்கி வருகிறார். அதன்படி 3வது ஆண்டாக நல்லம்பள்ளி ஒன்றிய பகுதியில் கிராம மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க டிராக்டர் மூலம் குடிநீர் வழங்கும் சேவையை அவர் நேற்று தொடங்கி வைத்தார்.

சோளையனூர் கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில தொழிற்சங்க துணைத்தலைவர் விஜய்வெங்கடேஷ், கழக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் குமார், ஒன்றிய கழக செயலாளர் ராஜா, உள்பட கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

தேமுதிக சார்பில் வழங்கப்பட்ட குடிநீரை பெற்றுக்கொண்ட கிராம மக்கள் கேப்டன் விஜயகாந்த்துக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top